Monday, October 7, 2013

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்.


மக்கள் கவிஞர் என்று  போற்றப்படுகின்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,தனது 29ஆம் வயதில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் இன்றைய தினத்தில் மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரின் கருத்து செறிவான பாடல்கள் இன்றும் நம்மிடையே நீங்காமல் நிலைத்து இருக்கின்றது.

பள்ளி சென்று பயிலவில்லை, திண்ணை கல்வி மட்டும் அதுவும் ஓரிரு ஆண்டுகள் தான். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார். பின் பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிக்கையில் இணை ஆசிரியராக பணி புரிந்தார்.

புகழ் பெற்ற நடிகரான ஓ.ஏ.கே.தேவரும், பட்டுகோட்டையாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

இவரின் பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தும்.  இவரின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.