Thursday, December 26, 2013

26-December-2013

முதலையின் நாக்கு வாயின் உட்புறத்தில் மேல் பகுதியில் ஒட்டி கொண்டிருக்கும். 

பழைய டைப்ரைட்டர் மெசின்க்களில் நம்பர் 1 விசை இருக்காது. நம்பர் " 1 " டைப் பண்ணவேண்டிஇருந்தால் சிறிய எழுத்தான " L " ஐ பயன்படுத்த வேண்டும். 

மனித மண்டை ஓடு 29 எலும்புகளால் ஆனது. 

முத்து வினிகரில் கரைந்து விடும். 

பசு இசையைக் கேட்க்கும் பொழுது அதிகமான பால் சுரக்குமாம். 

இரும்பு துரு பிடிக்கும் பொழுது முன்பை விட அதன் எடை அதிகமாக இருக்கும்.

Sunday, December 8, 2013

09-December-2013

கிரீசில் உள்ள பெரும்பாலான சினிமா அரங்களுக்கு கூரை இருக்காது. ஏன் என்றால் அங்கு நிலவும் மிதமான சூடான தட்ப வெப்ப நிலை தான் காரணம். 

ஐஸ்லாந்தில் ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் கிடையாது.

மசாலா பொருள்களில் விலை அதிகமானது குங்குமப்பூ .

மிக கொடிய விஷம் கொண்ட தவளை (Tiny Arrow Frog)2,200 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டது. 

வவ்வால்கள் பாலூட்டிகளில் மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. 

சராசரியாக ஒரு ஈயின் வாழ்கை காலம் ஒரு மாதம் மட்டும் தான்.

08-December-2013

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையின் எடை தான் அதிகமானது. யானை மூளையின் எடை 5 கிலோ ஆகும் . 

தான்சானியா நாட்டில் உள்ள ஒர் ஏரியின் தண்ணிர் அங்கு வரும் பறவை,மிருகங்களைக் கொன்று அவற்றைக் கல் ஆக மாற்றி விடும் தனமை கொண்டது.அதற்குக் காரணம் அந்தத் தண்ணிரின் அதிகமான PH (10.5) அள்வு தானாம். 

1988 ஆம் ஆண்டுச் சியோலில் துவங்கிய ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அந்தச் சமயத்தில் ஒலிம்பிக் போட்டியில் பறக்க விடப்பட்ட புறாக்கள் அனைத்தையும் உயிருடன் எரித்துக் கொன்று விட்டது. 

கலியம்(Gallium-Ga) என்ற் உலொகம் உஙகள் உள்ள்ங்க்கையில் உள்ள சூட்டிற்கே உருகி விடும். 

"School" என்ற வார்த்தை "Skhole" கிரெக்க என்ற வார்த்தையில் இருந்து பிற்ந்தது. 

1660 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்ப்ட்ட கடிகாரத்தில் ஒரெ ஒரு முள் மட்டும் தான் இருந்தது. நிமிடத்திற்கு என்று தனி முள் கிடையாது.

Thursday, December 5, 2013

06-December-2013

வுக்ரைனை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் வ்லாடிமிர் க்ளிட்ச்ச்கோ (Wladimir Klitschko), தான் ஜெயித்த ஒலிம்பிக் பதக்கத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வுக்ரைன் ஏழை குழந்தைக்களுக்குச் செலவிட எண்ணி 1 மில்லியன் டாலர்க்கு விற்றார். அதை வாங்கியவர் அந்த மெடலை மரியாதை நிமித்தமாக க்ளிட்ச்ச்கோ விடம் ஒப்படைத்து விட்டார். 

ஐ.நா சபை நெல்சன் மண்டேலாவின் அமைதி,சுதந்திர போராட்ட பங்களிப்பை கெளரவப் படுத்தும் வகையில்,நெல்சன் மண்டேலா பிறந்தநாள் 18th July ஒவ்வொரு வருடமும் "சர்வதேச மண்டேலா தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 

இன்றைய தினத்தில்(6th December 1956) இந்திய அரசியலமைப்பை இயற்றிய பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இறந்தார்.

உலகில் அதிக முந்திரி உற்பத்தி செய்யும் நாடு நைஜீரியா.

2008 ஆம் ஆண்டு தான் அமெரிக்கா நெல்சன் மண்டேலாவின் பெயரை தீவிரவாதிகளின் தேடுவோர் பட்டியலில் இருந்து நீக்கியது. 

பையினப்பிள் தோன்றிய நாடு பிரேசில்.

Sunday, December 1, 2013

02-December-2013

ஆப்ரிக்க யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவும் , 200 லிட்டர் தண்ணீரும் தேவையாம்.

மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தன்னுடைய சொத்தில் 98 சதவிகிதத்தை செலவழித்தாலும் அவர் அப்பொழுதும் பில்லியனர் தான்...

ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்-U1206, 1945 ஆம் வருடம் ரோந்து பணியில் இருந்த பொழுது டாய்லெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூழ்கியது.

ஹிட்லர் சல்யுட் / நாஜி சல்யுட் என்பது நாஜி படைவீரர்கள் ஹிட்லருக்கு வழங்கும் மரியாதையாக கடைபிடிக்கப்பட்டது. 
இப்பொழுது ஹிட்லர் சல்யுட் ஆனது ஆஸ்திரியா, ஜெர்மனி, செக் ரேபபுளிகில் தடை செய்யப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் பதக்கங்கள் கலை, அறிவியலுக்கு 1912ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

இது வரை விண்கல்(Meteorite) தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட மனிதர் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணி ஆவார்.