Thursday, August 22, 2013

ஜென் துறவியும்,திருடனும்...


ஜென் துறவியும்,திருடனும்...

ஒரு நாள் மாலை நேரத்தில், ஜென் துறவி ஒருவர் தன்னுடைய வீட்டில் கண்ணை மூடி  மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில் திருடன் ஒருவன் பெரிய கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து துறவியிடம், "உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறாயா... இல்ல இந்த கத்தியால் குத்துப்பட்டு சாகிறாயா???" என்று ஜென் துறவியை மிரட்டினான்.

துறவி சிறிதும் கலங்காமல்,மிக நிதானமாக, " பணம் அனைத்தும் அங்கே இருக்கும் மேஜையில் இருக்கிறது.... எடுத்துக்கொள்ளவும்..." என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஜெபத்தை தொடர்ந்தார்.

இதை கேட்ட திருடனுக்கோ ஒரே குழப்பம்... என்னடா இது... கொஞ்சம் கூட பயபடமால்  பணம் இருக்கும் இடத்தை சொல்கிறாரே!!!.. உண்மையிலேயே பணம் இருக்குமா.. நாம் இது வரை திருட சென்ற வீட்டில் எல்லாம் பணம் இல்லேன்னு தான் சொல்வாங்க.." என்று குழப்பத்துடன்  மேஜையை நோக்கி சென்றான்.


மேஜையில் பணம் இருந்தது. திருடனுக்கோ மிகவும் சந்தோசம்... பணத்தை அவசரமாக அள்ளி கொண்டு இருந்தான். 

துறவி திருடனை நோக்கி, "எல்லா பணத்தையும் எடுத்து சென்று விடாதே.... நாளை நான் வரி கட்ட வேண்டும். கொஞ்சம் பணத்தை மட்டும் விட்டு செல்..." என்று கேட்டுக்கொண்டார்..

திருடனுக்கு குழப்பம் அதிகமானது.. மனசுக்குள் "இவரு ரெம்ப நல்லவருன்னு" சொல்லிக்கொண்டு துறவிக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டின் வாசலுக்கு வந்தான்.

துறவி திருடனை திருமபவும் அழைத்தார். 

"இவ்வளவு  பணம் எடுத்தாயே... எனக்கு நீ நன்றி சொல்லவே இல்லையே!!!" என்று கேட்டார் துறவி.

திருடனுக்கோ குழப்பம் இன்னும் அதிகமானது... 

வீட்டிற்க்குள் வந்து, "மிகவும் நன்றி துறவியே..." என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

திருடன் தன்னுடயை நண்பர்களிடம் நடந்தவற்றை பற்றி கூறினான்.அவனுடைய நண்பர்களும் தங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது இல்லேயே!!! என்று ஆச்சரியப்பட்டனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்கிறார் போல திருடன் போலிசிடம் சிக்கினான்.

சாட்சிக்காக துறவியை போலிஸ் அழைத்தது. 

சாட்சி சொல்ல சென்ற துறவி, திருடனை பார்த்து "நான்  தான் இவனுக்கு பணம் கொடுத்தேன். இவன் எனக்கு நன்றி கூட சொன்னானே.. இவன் திருடன் இல்லை..." என்று துறவி சொன்னார்.

துறவியின் இந்த செயல் திருடனை திருத்தியது.

அவன் அன்றிலிருந்து திருட்டை விட்டுவிட்டு அந்த துறவியின் சீடனாக சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை நன்னெறியுடன் வாழ்ந்து கழித்தான்.

Wednesday, August 21, 2013

பிரியங்கா




பிரியங்கா என்கிற இந்த பனிரெண்டு வயது சிறுமிக்கு  சரியாக பேச, நடக்க  முடியாது. ஆனால் அவர் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயம் என்னவென்றால்  120 வருட காலண்டரில்  தேதியை சொன்னால் நிமிடத்தில் துல்லியமாக கிழமையை மிகச் சரியாக சொல்கிறார். 

பிரியங்கா 

கிழமையைச்  சொல்லி அந்த மாதத்தில்  எந்த தேதியில் அந்த கிழமை வருகிறது என்று கேட்டால்  நிமிடத்தில் உங்களுக்கு தேதிகள் கிடைக்கிறது மிக சரியாய்....

இதை  எப்படி சொல்கிறாய் என்று கேட்டால்  "எனக்கு கடவுள் சொல்லிக்குடுக்கிறார்." என்று நம்மை பிரமிக்க வைக்கிறார்.

அவர் நன்கு பேச, நடக்க நாம் வாழ்த்துவோமே........



Thanks: Vikatan.com

Sunday, August 18, 2013

உங்களுக்கு தெரியுமா...



ஆயுள் தண்டனையை விலக்கி கொண்ட நாடு எது தெரியுமா ? - போர்சுகல்.

நட்சத்திர மீனை நீங்கள் உனக்கு மூளை இல்லையான்னு திட்ட முடியாது... ஏனென்றால் அதற்கு மூளை கிடையாது.

முதலை தன்னுடைய நாக்கை வெளியே நீட்ட முடியாதாம்.

பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 சதைகள் இருக்குமாம்.

மீன்களால் தன்னுடைய கண்களை சிமிட்ட முடியாது. ஆனால் சுறா மீன் அதற்க்கு விதி விலக்கு . சுறா மீனால் தன்னுடைய இரண்டு கண்களையும் சிமிட்ட முடியும்.

வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் தந்தைகள் இருவரும் நண்பர்கள்.

நோபெல் பரிசின் பரிசு தொகை ஒவ்வொரு வருடமும் நோபெல் கமிட்டியினால் நிர்ணயிக்கப்படுக்கிறது.

வாழை பழ ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு  - இந்தியா.

மைக்கேல்  ஃபாரடே தனது 14ஆம் வயதில் புத்தக விற்பனை மற்றும் பைண்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து , அறிவியல் சம்பந்தமான நூல்களை தனது ஓய்வு நேரத்தில் படித்தாராம்.

ஆங்கில சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின்  தனது 88வது வயதில் , கிறிஸ்துமஸ் (25th December 1977) தினத்தில் இறந்தாராம்.

Wednesday, August 14, 2013

15 ஆகஸ்டு 2013

இன்றைய தினம் இந்தியா தனது 67வது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகின்றது. 

இன்றையத் தினத்தில் சுதந்திரம் பெற போராடி தனது உயிர் நீத்த தியாகிகள் மற்றும் நாட்டை எதிரிகளிடம் இருந்து காக்கும் நமது ராணுவ வீரர்கள அனைவருக்கும் நன்றி கூறுவோம். 

Sunday, August 11, 2013

12 ஆகஸ்ட் 2013


குரங்கு அரசன் 

ஒரு பெரிய காட்டில் குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அந்த குரங்களுக்கு அரசனாக ஒரு பெரிய குரங்கு ஒன்று இருந்தது. அதனுடைய உடல் மிகவும் குண்டாகவும்,பலசாலியாகவும்,உயரமாகவும் இருந்தது. அரசன் குரங்கு மற்றவர்கள் மீது மிகவும் பாசமாகவும்,அறிவாளியாகவும் விளங்கியது.

அந்த காட்டில் சுற்றிலும் மாந்தோப்புகள் இருந்தன. அதில் மாங்காய்க காய்த்து தொங்கி கொண்டிருந்தன. சில மாமரங்கள் அந்த பக்கம் செல்லும் ஆற்றின் ஓரத்தில் இருந்தது.  
ஆற்றின் மறு முனையில் ஒரு மனித அரசன் தனது படை சகாக்குளுடன் முகாமிட்டு இருந்தான்.

அரசர் குரங்கு தனது படையில் இருக்கும் அனைத்துக் குரங்களுக்கும்  ஒரு வித்தியசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆற்றின் ஓரத்தில் இருக்கும் அனைத்து  மாமரங்களில் இருக்கும் மாங்காய்களையும் பிடுங்க சொன்னது.

குரங்குகள் தங்களது மன்னர் உத்தரவுக்கு கீழ் படிந்து அனைத்து  மாங்காய்களையும்  பிடுங்கின. ஆனால் ஒரு மாங்காய் மட்டும் பிடுங்காமல் மரத்தில் இருந்தது. அந்த மாங்காய் பின் பழுத்து பழமாகி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் போக்கில் அடித்து சென்ற பழம் அங்கு குளித்து கொண்டிருந்த மனித மன்னர் அருகில் சென்றது. அது என்ன பழம் என்று தெரியாத மன்னர் அந்த பழத்தை தன்னுடைய அமைச்சர்களை சாப்பிட சொன்னார்.


பழத்தை சாப்பிட்ட அமைச்சர்கள் அது மிகவும் சுவையாக இருக்கிறது என்று சொன்னார்கள். மன்னரும் ருசி பார்த்தார்.. அவ்வளவு தான்.... மாம்பழ ருசியின் தித்திப்பு அவருக்கு இன்னும் கொஞ்சம் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என எண்ணி தனது படை சகாக்களுக்கு அந்த பழங்களை தேட உததரவு இட்டார்...  அவர்களுடன் சேர்ந்து மன்னரும் தேடுதல் வேட்டையில் இறங்கினார். பழம் வந்த திசையை நோக்கி அவர்கள் பயணம் தொடங்கியது.

தேடினார்கள்...தேடினார்கள்...  

இரவு,பகலாக தேடுதல் தொடர்ந்தது.மாமரங்கள் இருக்கும் பகுதியை வந்தடைந்தனர்.ஆனால் அங்கே இருந்த குரங்குகளை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த குரங்குகள் அடித்து துரத்தி விட்டு நாம் இந்த பகுதியை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்று மன்னர் எண்ணினார். அவருக்கு மாம்பழ ஆசை அவருடைய புத்தியை மறைத்தது.

குரங்குகள் அனைத்தையும் காட்டை விட்டு விரட்ட மன்னர் தனது படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.விளைவு....குரங்குகள் துரத்தப் பட்டன. ஓடி கொண்டிருந்த குரங்குகள் ஒரு பெரிய மலை உச்சியை சென்று அடைந்தன.மலைக்கு அந்த பக்கம் ஒரு பெரிய மூங்கில் காடு இருந்தது.. ஆனால் அந்த மூங்கில் காட்டை சென்றடைய வேண்டுமானால் மலைக்கும்,மூங்கில் காட்டிற்கும் இடைய உள்ள மிக பெரிய பாதாளத்தை கடக்க வேண்டும்.

மன்னர் குரங்கு கொஞ்சம் யோசித்து விட்டு, தனது உயிரை பொருட்படுத்தாமல் மிக நீண்ட பெரிய கை, காலை நீட்டி ,மலைக்கும், மூங்கில் காட்டுக்கும் இடையே பாலம் போன்று அமைத்தது.தனது படைகள் அனைத்துக்கும் தன் மீது ஏறி சென்று மூங்கில் காட்டை அடைய சொல்லி உத்தரவு இட்டது.

மன்னர் உத்தரவை மீற முடியுமா... அனைத்து குரங்குகளும் அரசர் உடம்பின் மீது ஏறி மலை உச்சியில் இருந்து மூங்கில் காட்டை சென்றடைந்தன.

கடைசியாக சென்ற குரங்குக்கு அரசரை கொன்று விட்டு நாம் மன்னராக வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணம் இருந்தது. இது தான் தக்க தருணம் என்று எண்ணி தனது அரசரை கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தது.  தனது அரசரின் முதுகில் ஏறி ஓடும் போது அதனுடைய நெஞ்சில் மிகவும் பலம் கொண்டு குத்தியது.குத்தி விட்டு மூங்கில் காடை சென்றடைந்தது. வலி தாங்க முடியாமல் மன்னர் குரங்கு கதறிய படி  மேலே இருந்து மலை இடுக்கில் விழுந்தது.தன்னுடயை சுய நினைவை இழந்தது.

இதை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த மனித அரசர், தனது சகாக்களுக்கு குரங்கு மன்னரை காப்பாற்ற உத்தரவு இட்டார்.குரங்கு மன்னர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது.

மனித அரசர், குரங்கு மன்னரிடம் ,"ஏன் உன்னுடைய உயிரை பணயம் வைத்து உனது சகாக்கள் அனைவரையும் காப்பாற்றினாய்?"

குரங்கு மன்னர் ,"ஏன் என்றால் நான் தான் எங்கள் இனத்து தலைவன்.. அவர்களை துன்பத்தில் இருந்து காப்பது எனது கடமை", என்று சொன்னது.

அது மட்டும் இல்லாமல் அரசர் குரங்கு, தனக்கு தீங்கு செய்த குரங்கை மன்னித்தது.

இதை கேட்ட மனித மன்னர் மனம் மாறினார். மன்னர் என்றால் நம் இனத்தவரை துன்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்ற பாடம் குரங்கு தலைவனிடம் இருந்து கற்று கொண்டார்..

அந்த குரங்குகள் அனைத்தையும் மூங்கில் காட்டில் எந்த துன்பம் இல்லாமல் காத்து வந்தார். 



Wednesday, August 7, 2013

07 ஆகஸ்டு 2013


07 ஆகஸ்டு 2013

07 ஆகஸ்டு  1941 , நோபல் பரிசு பெற்ற  இந்திய வங்காள மொழிக் கவிஞர்  இரவீந்தரநாத் தாகூர்  தனது எண்பதாவது வயதில் மறைந்த தினம்.

இந்திய தேசியகீதமான ஜன கண மன  பாடலை இயற்றிய பெருமை இவரையே சாரும் மற்றும் இவரது மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா பங்களாதேஷின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது.

------------------------------------------------------------------------------------------------------------
Interesting English Words

Bumbershoot - An umbrella.

Namby-pamby - Weak, with no backbone.

------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, August 6, 2013

06 ஆகஸ்டு 2013




06 ஆகஸ்டு 1962 ஆம் ஆண்டு ஜமைக்கா நாடு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது.  இன்றைய தினம் ஜமைக்கா நாட்டினர் தங்களது விடுதலை தினமாக அதை கொண்டாடுகின்றனர்.

ஜமைக்கா என்று சொன்னவுடன் நமக்கு மின்னல் ஓட்ட வீரர் "உசைன் போல்ட்" ஞாபகம் நமக்கு வருகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

Interesting English words:

Dextrosinistral - meaning a left-handed person trained to use the right hand.

Ambidextrous - meaning a person who has the ability to write with both hands efficiently.
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 

தண்ணீர்...  தண்ணீர்... 

ஒரு கிராமத்தில் பாலு என்கிற ஒரு மரவெட்டி இருந்தானாம்  அவனுடைய தொழில் காட்டில் சென்று மரத்தை வெட்டி அதன் விறகை விற்று பிழைப்பை நடத்தி கொண்டு இருந்தான். தன்னுடைய தேவைக்காக நல்ல மற்றும் காய்ந்து போன மரங்களையும் வெட்டினான்.

ஒரு  நாள் காட்டில் மரம் வெட்டி கொண்டு இருக்கும் பொழுது மிகவும்  தாகம் எடுத்தது. குடிக்க தண்ணிரை தேடி காட்டில் அலைந்து திரிந்தான்.  ஒரு இடத்தில மிகவும் கொஞ்சமாக தண்ணிர் இருந்தது. அது அவனுடைய தாகத்தை முழுதும் தீர்க்கவில்லை.  அங்கே இருந்த நீரை 
குடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டான்.

வீட்டுக்கு சென்று இரவு தூங்கி கொண்டு இருக்கும் பொழுது ஒரு கனவு வந்தது.

அந்த கனவில் பூமி தாய் தோன்றினாள்.  

பூமி தாய் , "எதற்கு தெரியுமா  உனக்கு குடிக்க சொற்பமான நீரே கிடைத்தது? "

பாலு  (மரவெட்டி): "தெரியவில்லையே தாயே......"

பூமி தாய் : "மழை பொழிய மரங்கள் தேவை முக்கியம் ...., மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக  எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்து காட்டை அழிக்கிறார்கள்... அதனால் தான் மழை பொழிவு மிக குறைவா இருக்கு.. அதனால் தான் தண்ணிர் குறைவாக கிடைக்கிறது....." என்று சொல்லிவிட்டு பூமி தாய்  மறைந்துவிட்டாள்.

கனவில் இருந்து எழுந்த மரவெட்டி, அடுத்த நாள் முதல் மரம் வெட்டும் தொழிலை அடியோடு விட்டு விட்டு புதிதாக வேறு வேலை செய்து பிழைப்பை நடத்தினான்.

இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மரங்களை வெட்டினால் மழை பொழிவு குறையும்.