Thursday, August 22, 2013

ஜென் துறவியும்,திருடனும்...


ஜென் துறவியும்,திருடனும்...

ஒரு நாள் மாலை நேரத்தில், ஜென் துறவி ஒருவர் தன்னுடைய வீட்டில் கண்ணை மூடி  மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில் திருடன் ஒருவன் பெரிய கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து துறவியிடம், "உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறாயா... இல்ல இந்த கத்தியால் குத்துப்பட்டு சாகிறாயா???" என்று ஜென் துறவியை மிரட்டினான்.

துறவி சிறிதும் கலங்காமல்,மிக நிதானமாக, " பணம் அனைத்தும் அங்கே இருக்கும் மேஜையில் இருக்கிறது.... எடுத்துக்கொள்ளவும்..." என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஜெபத்தை தொடர்ந்தார்.

இதை கேட்ட திருடனுக்கோ ஒரே குழப்பம்... என்னடா இது... கொஞ்சம் கூட பயபடமால்  பணம் இருக்கும் இடத்தை சொல்கிறாரே!!!.. உண்மையிலேயே பணம் இருக்குமா.. நாம் இது வரை திருட சென்ற வீட்டில் எல்லாம் பணம் இல்லேன்னு தான் சொல்வாங்க.." என்று குழப்பத்துடன்  மேஜையை நோக்கி சென்றான்.


மேஜையில் பணம் இருந்தது. திருடனுக்கோ மிகவும் சந்தோசம்... பணத்தை அவசரமாக அள்ளி கொண்டு இருந்தான். 

துறவி திருடனை நோக்கி, "எல்லா பணத்தையும் எடுத்து சென்று விடாதே.... நாளை நான் வரி கட்ட வேண்டும். கொஞ்சம் பணத்தை மட்டும் விட்டு செல்..." என்று கேட்டுக்கொண்டார்..

திருடனுக்கு குழப்பம் அதிகமானது.. மனசுக்குள் "இவரு ரெம்ப நல்லவருன்னு" சொல்லிக்கொண்டு துறவிக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டின் வாசலுக்கு வந்தான்.

துறவி திருடனை திருமபவும் அழைத்தார். 

"இவ்வளவு  பணம் எடுத்தாயே... எனக்கு நீ நன்றி சொல்லவே இல்லையே!!!" என்று கேட்டார் துறவி.

திருடனுக்கோ குழப்பம் இன்னும் அதிகமானது... 

வீட்டிற்க்குள் வந்து, "மிகவும் நன்றி துறவியே..." என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

திருடன் தன்னுடயை நண்பர்களிடம் நடந்தவற்றை பற்றி கூறினான்.அவனுடைய நண்பர்களும் தங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது இல்லேயே!!! என்று ஆச்சரியப்பட்டனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்கிறார் போல திருடன் போலிசிடம் சிக்கினான்.

சாட்சிக்காக துறவியை போலிஸ் அழைத்தது. 

சாட்சி சொல்ல சென்ற துறவி, திருடனை பார்த்து "நான்  தான் இவனுக்கு பணம் கொடுத்தேன். இவன் எனக்கு நன்றி கூட சொன்னானே.. இவன் திருடன் இல்லை..." என்று துறவி சொன்னார்.

துறவியின் இந்த செயல் திருடனை திருத்தியது.

அவன் அன்றிலிருந்து திருட்டை விட்டுவிட்டு அந்த துறவியின் சீடனாக சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை நன்னெறியுடன் வாழ்ந்து கழித்தான்.

1 comment:

  1. கருத்துள்ள பகிர்வு... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete