Sunday, August 11, 2013

12 ஆகஸ்ட் 2013


குரங்கு அரசன் 

ஒரு பெரிய காட்டில் குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அந்த குரங்களுக்கு அரசனாக ஒரு பெரிய குரங்கு ஒன்று இருந்தது. அதனுடைய உடல் மிகவும் குண்டாகவும்,பலசாலியாகவும்,உயரமாகவும் இருந்தது. அரசன் குரங்கு மற்றவர்கள் மீது மிகவும் பாசமாகவும்,அறிவாளியாகவும் விளங்கியது.

அந்த காட்டில் சுற்றிலும் மாந்தோப்புகள் இருந்தன. அதில் மாங்காய்க காய்த்து தொங்கி கொண்டிருந்தன. சில மாமரங்கள் அந்த பக்கம் செல்லும் ஆற்றின் ஓரத்தில் இருந்தது.  
ஆற்றின் மறு முனையில் ஒரு மனித அரசன் தனது படை சகாக்குளுடன் முகாமிட்டு இருந்தான்.

அரசர் குரங்கு தனது படையில் இருக்கும் அனைத்துக் குரங்களுக்கும்  ஒரு வித்தியசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆற்றின் ஓரத்தில் இருக்கும் அனைத்து  மாமரங்களில் இருக்கும் மாங்காய்களையும் பிடுங்க சொன்னது.

குரங்குகள் தங்களது மன்னர் உத்தரவுக்கு கீழ் படிந்து அனைத்து  மாங்காய்களையும்  பிடுங்கின. ஆனால் ஒரு மாங்காய் மட்டும் பிடுங்காமல் மரத்தில் இருந்தது. அந்த மாங்காய் பின் பழுத்து பழமாகி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் போக்கில் அடித்து சென்ற பழம் அங்கு குளித்து கொண்டிருந்த மனித மன்னர் அருகில் சென்றது. அது என்ன பழம் என்று தெரியாத மன்னர் அந்த பழத்தை தன்னுடைய அமைச்சர்களை சாப்பிட சொன்னார்.


பழத்தை சாப்பிட்ட அமைச்சர்கள் அது மிகவும் சுவையாக இருக்கிறது என்று சொன்னார்கள். மன்னரும் ருசி பார்த்தார்.. அவ்வளவு தான்.... மாம்பழ ருசியின் தித்திப்பு அவருக்கு இன்னும் கொஞ்சம் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என எண்ணி தனது படை சகாக்களுக்கு அந்த பழங்களை தேட உததரவு இட்டார்...  அவர்களுடன் சேர்ந்து மன்னரும் தேடுதல் வேட்டையில் இறங்கினார். பழம் வந்த திசையை நோக்கி அவர்கள் பயணம் தொடங்கியது.

தேடினார்கள்...தேடினார்கள்...  

இரவு,பகலாக தேடுதல் தொடர்ந்தது.மாமரங்கள் இருக்கும் பகுதியை வந்தடைந்தனர்.ஆனால் அங்கே இருந்த குரங்குகளை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த குரங்குகள் அடித்து துரத்தி விட்டு நாம் இந்த பகுதியை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்று மன்னர் எண்ணினார். அவருக்கு மாம்பழ ஆசை அவருடைய புத்தியை மறைத்தது.

குரங்குகள் அனைத்தையும் காட்டை விட்டு விரட்ட மன்னர் தனது படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.விளைவு....குரங்குகள் துரத்தப் பட்டன. ஓடி கொண்டிருந்த குரங்குகள் ஒரு பெரிய மலை உச்சியை சென்று அடைந்தன.மலைக்கு அந்த பக்கம் ஒரு பெரிய மூங்கில் காடு இருந்தது.. ஆனால் அந்த மூங்கில் காட்டை சென்றடைய வேண்டுமானால் மலைக்கும்,மூங்கில் காட்டிற்கும் இடைய உள்ள மிக பெரிய பாதாளத்தை கடக்க வேண்டும்.

மன்னர் குரங்கு கொஞ்சம் யோசித்து விட்டு, தனது உயிரை பொருட்படுத்தாமல் மிக நீண்ட பெரிய கை, காலை நீட்டி ,மலைக்கும், மூங்கில் காட்டுக்கும் இடையே பாலம் போன்று அமைத்தது.தனது படைகள் அனைத்துக்கும் தன் மீது ஏறி சென்று மூங்கில் காட்டை அடைய சொல்லி உத்தரவு இட்டது.

மன்னர் உத்தரவை மீற முடியுமா... அனைத்து குரங்குகளும் அரசர் உடம்பின் மீது ஏறி மலை உச்சியில் இருந்து மூங்கில் காட்டை சென்றடைந்தன.

கடைசியாக சென்ற குரங்குக்கு அரசரை கொன்று விட்டு நாம் மன்னராக வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணம் இருந்தது. இது தான் தக்க தருணம் என்று எண்ணி தனது அரசரை கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தது.  தனது அரசரின் முதுகில் ஏறி ஓடும் போது அதனுடைய நெஞ்சில் மிகவும் பலம் கொண்டு குத்தியது.குத்தி விட்டு மூங்கில் காடை சென்றடைந்தது. வலி தாங்க முடியாமல் மன்னர் குரங்கு கதறிய படி  மேலே இருந்து மலை இடுக்கில் விழுந்தது.தன்னுடயை சுய நினைவை இழந்தது.

இதை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த மனித அரசர், தனது சகாக்களுக்கு குரங்கு மன்னரை காப்பாற்ற உத்தரவு இட்டார்.குரங்கு மன்னர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது.

மனித அரசர், குரங்கு மன்னரிடம் ,"ஏன் உன்னுடைய உயிரை பணயம் வைத்து உனது சகாக்கள் அனைவரையும் காப்பாற்றினாய்?"

குரங்கு மன்னர் ,"ஏன் என்றால் நான் தான் எங்கள் இனத்து தலைவன்.. அவர்களை துன்பத்தில் இருந்து காப்பது எனது கடமை", என்று சொன்னது.

அது மட்டும் இல்லாமல் அரசர் குரங்கு, தனக்கு தீங்கு செய்த குரங்கை மன்னித்தது.

இதை கேட்ட மனித மன்னர் மனம் மாறினார். மன்னர் என்றால் நம் இனத்தவரை துன்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்ற பாடம் குரங்கு தலைவனிடம் இருந்து கற்று கொண்டார்..

அந்த குரங்குகள் அனைத்தையும் மூங்கில் காட்டில் எந்த துன்பம் இல்லாமல் காத்து வந்தார். 



No comments:

Post a Comment